சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது
சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
போளூர்
சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போளூர் சாவடி தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சாந்தி (வயது 60), கள்ளச்சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தார்.
சாந்தி தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்யுமாறு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் சாந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story