கார்- லாரி மோதியதில் பெண் பலி
தஞ்சை அருகே கார்- லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சை அருகே கார்- லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரில் பயணம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது43). இவர் தனது மனைவி வெண்ணிலா (40), உறவினர்கள் நடராஜன் (32), ரஞ்சிதா (26) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் காரில் வீட்டிலிருந்து தஞ்சை நோக்கி புறப்பட்டார். காரை மேகநாதன் ஓட்டி வந்தார்.
தஞ்சை- பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் வந்த போது பின்னால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்பார் சிங் (38) என்பவர் ஓட்டி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் வந்த வெண்ணிலா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேகநாதன், நடராஜன், ரஞ்சிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மேகநாதன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வெண்ணிலாவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.