மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி


மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் மகேந்திரன்(வயது 37). இவர் நேற்று விளம்பாவூர்கிராமத்தை சேர்ந்த பாலாஜி மனைவி கோமதி(37) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு தியாகதுருகம் மார்க்கத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். நீலமங்கலம் இணைப்பு சாலையில் வந்தபோது எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மகேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோமதி, மகேந்திரன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார். மகேந்திரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story