மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலி
மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலியானார்.
வந்தவாசி
மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலியானார்.
வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வச்சலா (வயது 55). இவர்கள் இருவரும் செப்டாங்குளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில், பொன்னூர் மலை அருகில் சென்றபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதில் சாலையோர தடுப்புக் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வச்சலா சம்பவ இடத்திலேயே இறந்தார். செல்வம் காயம் அடைந்தார்.
இவர்ளுக்கு பின்னால் மற்றொரு இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வழூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சோலைவாழ் (37) என்பவர் மீது மகார் மோதியது. இதில் காயமடைந்த சோலைவாழ் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து செல்வத்தின் மகன் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.