மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனரை கழுத்தறுத்து கொன்ற பெண் சாராய வியாபாரி..!


மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனரை கழுத்தறுத்து கொன்ற பெண் சாராய வியாபாரி..!
x

மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனரை பெண் சாராய வியாபாரி கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள குறவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (வயது 37). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சத்யா. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு சதீஷ் (2) மகன் உள்ளார். நேற்று மாலை சிவமணி வீட்டில் இருந்த போது சவாரிக்கு வரவேண்டும் என்று செல்போன் அழைப்பு வந்தது.

இதனை நம்பிய சிவமணி தனது மனைவியிடம் சவாரிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் இரவு முழுவதும் சிவமணி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்யா செல்போனை தொடர்பு கொண்ட போது அது ஒலித்து கொண்டே இருந்தது. போனை சிவமணி எடுக்கவில்லை.

பதறி போன சத்யா தனது உறவினர்கள் உதவியுடன் சிவமணியை தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இன்று காலை சிவமணி எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் சருகில் பிணமாக கிடந்தார். இதனை அந்தவழியாக சென்ற விவசாயிகள், பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிவமணியின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அதோடு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது.

இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்துசென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர். அப்போது கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சாராய வியாபாரி பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் வனிதா என்பதும். வனிதா சாராய விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் வனிதாவுக்கும் ஆட்டோ ஓட்டுநர் சிவமணிக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருப்பதும் தெரியவந்தது.

நாளடைவில் வனிதாவின் மகளை சிவமணி ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பம் ஆக்கியதாக தெரிகிறது . இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சிவமணியை தனது கூட்டாளிகளின் உதவியோடு கொலை செய்து, உடலை வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனிதாவை கைது செய்த போலீசர், இச்சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்ட மேலும் இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story