பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள முதலிகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி காயத்ரிதேவி (வயது 24). இந்த தம்பதிக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. காயத்ரிதேவி நேற்று முன்தினம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக் தனது மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மனைவி காணவில்லை என குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.


Next Story