பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு
x

நித்திரவிளை அருகே குப்பை கொட்டச்சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே குப்பை கொட்டச்சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குப்பை கொட்ட சென்றார்

நித்திரவிளை அருகே உள்ள கலிங்கராஜபுரத்தில் சுனாமி காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ், மீனவர். இவருடைய மனைவி மரியகுளோரி (வயது55).

இந்தநிலையில் நேற்று மாலையில் தனது வீட்டின் அருகே குப்பைகள் தட்டும் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எடுத்துச் சென்றார். அதன்படி அந்த இடத்தில் குப்பைகளை தட்டிக் கொண்டிருந்தார்.

4½ பவுன் நகை பறிப்பு

அப்போது, அதன் அருகில் செடி,கொடிகள் வளர்ந்திருந்த புதரின் உள்ளே மறைந்திருந்த மர்ம நபர் திடீெரன எழுந்து வந்து மரியகுளோரியை தாக்கினார். இதில் மரியகுளோரியின் ஆடைகள் கிழிந்தன. தொடர்ந்து அந்த மர்ம நபர் மரியகுளோரி சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க நகையை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மரியகுளோரி திருடன்... திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கு தயாராக நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

கேமரா காட்சிகள் ஆய்வு

பின்னர், இதுகுறித்து மரியகுளோரி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு ேகமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story