தீக்குளித்த பெண் சாவு


தீக்குளித்த பெண் சாவு
x

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மதுரை

வாடிப்பட்டி,

அலங்காநல்லூர் அருகே குறவன் குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58) இவரது தங்கை சர்மிளா (34). இவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கச்சைகட்டி பெரியார் நகரை சேர்ந்த கரந்தமலை (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில் கரந்தமலை மதுவுக்கு அடிமையானதால் மனைவியிடம் தினந்தோறும் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 11-ந்தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்குள் சர்மிளா மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் தீயில் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சர்மிளா இறந்தார். இதனால் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கரந்தமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி சர்மிளாவின் அண்ணன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Related Tags :
Next Story