விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மங்கையர்கரசி(வயது32). கூலித்தொழிலாளி. இவரது கணவர் பிரான்சிஸ்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மங்கையர்க்கரசி சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த மங்கையர்கரசி வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மங்கையர்கரசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மங்ைகயர்கரசி தாய் கலைச்செல்வி(52) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story