மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் போராட்டம்
முதுகுளத்தூர் அருகே மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் போராட்டம்
முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு நிலையம் அருகில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இவ்வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே இந்த மதுபான கடையை அகற்றக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு திருவரங்கம் கிராம பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் அன்னபூர்ண பாண்டி கூறுகையில், எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடை ஊருக்கு உள்ளே மெயின் ரோட்டில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகமாக செல்லும் இடத்தில் அமைந்துள்ளது.
உண்ணாவிரதம்
இதன் காரணமாக மாணவிகளும், பெண்களும் அவ்வழியாக செல்ல அச்சம் அடைகின்றனர். இந்த மதுக்கடையை அங்கிருந்து அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுநாள் வரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மதுக்கடையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. மதுக்கடையை கடையை அகற்றாவிட்டால். கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.