நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 16, 17-வது வார்டுகளில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோதும் அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், முறையாக ஊதியம் வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த நெல்லை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story