ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேல்முருகன் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி சார்பில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பணி வழங்க மறுப்பதாக புகார் தெரிவித்து அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியை ஊராட்சி நிர்வாகம் புறக்கணிக்கணிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டுமென மேலாளர் பத்மினியிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story