சப்-கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்


சப்-கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x

சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கடலூர்

சிதம்பரம்:

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் இந்த அபாயகரமான திட்டத்தை செயல்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை மகளிர் ஆயம் அமைப்பை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இ்தற்கு நகர அமைப்பாளர் தில்லைக்கரசி தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் புவனேஸ்வரி, பவித்ரா, தமிழ் தேசிய பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் குபேரன், சிதம்பரம் நகர செயலாளர் வேந்தன் சுரேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தடை விதிக்க வேண்டும்

தொடர்ந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு, செறிவூட்டப்பட்ட அரிசியை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது, எந்த வித சோதனைக்கும் உட்படுத்தாமல், தமிழ்நாடு முழுவதும் அபாயகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செறிவூட்டப்பட்ட வேதி அரிசியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து சப்- கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story