காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்


காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
x

காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

நாகப்பட்டினம்

தலைஞாயிறை அடுத்த காடந்தேத்தி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்ைல. மேலும் மயான சாலை வசதி இல்லை என பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், குடிநீர் வழங்கக்கோரியும் அந்த பகுதி பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். தகவல் அறிந்ததும் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமலிங்கம், அண்ணாதுரை, தலைஞாயிறு போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story