குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
x

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

தஞ்சாவூர்

கோவிலடி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

திருக்காட்டுப்பள்ளி- கல்லணை சாலையில் காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள ஊர் கோவிலடி. கோவிலடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வரவில்லை. கோடை காலத்தில் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை திடீரென கோவிலடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் ே்பச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story