'பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும்' - தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
அரசியல் தமக்கான துறை இல்லை என்று பெண்கள் ஒதுங்கி நிற்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் தமக்கான துறை இல்லை என்று பெண்கள் ஒதுங்கி நிற்பதாகவும், பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். கல்லூரிக்குள் இருந்து அரசியல் செய்தால் தான் பிரச்சினை என்றும், வெளியே சென்று அரசியல் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story