சேலம் சிறையில் பெண் வார்டன்கள் மோதலா?-அதிகாரிகள் விசாரணை


சேலம் சிறையில் பெண் வார்டன்கள் மோதலா?-அதிகாரிகள் விசாரணை
x

சேலம் சிறையில் பெண் வார்டன்கள் மோதல் நடைபெற்றதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சேலம்

சேலம் ஏற்காடு ரோட்டில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இங்கு 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உதவி பெண் வார்டன் ஒருவர் பணிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த மற்றொரு உதவி வார்டன், தாமதம் குறித்து அங்கிருந்த பாரா புத்தகத்தில் எழுதினார்.

ஆனால் அந்த பக்கத்தை தாமதமாக வந்த உதவி வார்டன் கிழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் புகாருக்கு ஆளான உதவி வார்டன் அங்கிருந்து வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையில் பெண்கள் சிறையில் பணியாற்றும் வார்டன்கள் 2 பேர் லெஸ்பியன் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறைக்குள் பெண் வார்டன்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டார்களா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் கூறும் போது, 'லெஸ்பியன் விவகாரத்தில் பெண் வார்டன்கள் மோதி கொண்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அதுபோன்ற சம்பவம் சிறைக்குள் நடக்கவில்லை. இருந்தாலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.


Next Story