திண்டுக்கல்லில் ஆன்லைனில் இரட்டிப்பு பணம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி; பெண்கள் புகார்


திண்டுக்கல்லில் ஆன்லைனில் இரட்டிப்பு பணம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி; பெண்கள் புகார்
x

திண்டுக்கல்லில் ஆன்லைனில் இரட்டிப்பு பணம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், ஆன்லைனில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மூலம் பலகோடி மோசடி செய்யப்பட்டதாக திண்டுக்கல்லை சேர்ந்த பெண்கள் புகார் அளித்தனர். அதுபற்றி அந்த பெண்கள் கூறுகையில், ஒரு தனியார் ஆன்லைன் நிதிநிறுவனம் செயல்படுகிறது. அந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறினர்.

அதில் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம். மேலும் ரூ.3 ஆயிரத்துக்கு தினசரி ரூ.50-ம், ரூ.5 லட்சத்துக்கு ரூ.8 ஆயிரமும் வருமானம் கிடைக்கும் என்றும், சேவை கட்டணம் மற்றும் வரியை கழித்து 150 நாட்களில் இரட்டிப்பு பணத்தை பெற்று விடலாம் என்றும் தெரிவித்தனர். அதை உண்மை என நம்பி ஏராளமான பெண்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலுத்தி உள்ளனர். அவ்வாறு பணம் செலுத்திய மக்களுக்கு ஒருசில நாட்கள் மட்டுமே பணம் வந்தது. அதன்பின்னர் பணம் வரவில்லை. அதோடு ஆன்லைனில் தொடர்பு கொள்ள முடியாத வகையில் செய்துவிட்டனர்.

அது தொடர்பாக நிதிநிறுவனத்தில் சேர்த்து விட்டவர்களிடம் கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை. இதன்மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கும் வாய்ப்பு உள்ளது. இதில் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் சாதாரண நடுத்தர மக்கள் ஆவர். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்றனர்.


Next Story