மகளிர் தின சைக்கிள் ஊர்வலம்


மகளிர் தின சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், மகளிர்தினத்தையொட்டி நடந்த சைக்கிள் ஊர்வலத்தில் கலெக்டர் சாருஸ்ரீ, நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், துணைதலைவர் அகிலா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூரில், மகளிர்தினத்தையொட்டி நடந்த சைக்கிள் ஊர்வலத்தில் கலெக்டர் சாருஸ்ரீ, நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், துணைதலைவர் அகிலா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகளிர்தினம்

தாய், சகோதரி, மனைவி, மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள், ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான் நாம் வசிக்கும் நாடு கூட 'தாய் நாடு' என அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள் அனைத்துக்கும் பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது.

நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சிறந்து விளங்குகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது.

சைக்கிள் ஊர்வலம்

அதன்படி திருவாரூரிலும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலெக்டர் சாருஸ்ரீ, நகரமன்றதலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகரர் மற்றும் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட சைக்கிள் ஊர்வலம் நடந்தது. திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடந்த இந்த ஊர்வலத்தை பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நகராட்சி ஆணையர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story