நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா


நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா
x

வீட்டில் திருடமுயன்றவவ்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்தவர் இளையகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே, தமிழ்செல்வி வசிக்கும் வீடு சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வி வீட்டை பூட்டி விட்டு, துக்க நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைக்க முயன்றிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோேலார்பேட்டை போலீசார் சென்று மூன்று பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து உள்ளனர். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழ்செல்வியை போலீசார் அலைக்கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த தமிழ்செல்வி, வீட்டில் திருட முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று மாலை உடைத்த பூட்டுகளுடன் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார். இதனையடுத்து போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோர் இரு தரப்பினரையும் வரவழைத்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்ததன் பேரில் தமிழ்செல்வி தர்ணாவை கைவிட்டு சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story