பெண் கல்வி விழிப்புணர்வு பேரணி


பெண் கல்வி விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் பெண் கல்வி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 7 சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் சுந்தரேசபுரம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமின் 3-வது நாளான நேற்று பெண் கல்வி, குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரனியை சுந்தரேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காசி ரசூல் இப்ராஹிம் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ஆறுமுகம் செய்திருந்தார்.


Next Story