மகளிர் உரிமைத்தொகை திட்ட களப்பணிகள்
குடவாசல் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட களப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
திருவாரூர்
குடவாசல்:
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு பயனாளர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் சரியானதா என மாவட்ட அலுவலர்கள் கொண்டு களப்பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே இந்த கள ஆய்வு பணிகள் சரியாக நடக்கிறதா என குடவாசல் பகுதியில் உள்ள அகரஓகை, குடவாசல், மஞ்சக்குடி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் ஆய்வு செய்தார். அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள இடங்களுக்கு சென்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் தாங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியானதா என கேட்டறிந்தார். அவருடன் குடவாசல் தாசில்தார் தேவகி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story