பெண்களுக்கான கபடி போட்டி
பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது.
தோகைமலை அருகே பில்லூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக மாவட்ட அளவில் பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில், கோவை, சென்னை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகளின் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் முதல் பரிசை கரூர் அமராவதி கலை, அறிவியல் கல்லூரி அணியும், 2-வது பரிசை சென்னை பி.டி.கே. பெண்கள் அணியும், 3-வது பரிசை திருவண்ணாமலை பினிக்ஸ் கபடி அணியும், 4-வது பரிசை சேலம் ஏ.வி.எஸ். கபடி அணியும் பெற்றது. சிறந்த வீரர், சிறந்த பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
போட்டியை பில்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், கபடி வீரர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதேபோல் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியும் பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.