பெண்களுக்கான கபடி போட்டியில் கரூர் அணி வெற்றி


பெண்களுக்கான கபடி போட்டியில்  கரூர் அணி வெற்றி
x

அருண் நேரு பிறந்தநாளையொட்டி நடந்த பெண்களுக்கான கபடி போட்டியில் கரூர் அணி வெற்றி பெற்றது. ஆண்களுக்கான போட்டியில் சென்னை காவல்துறை அணி முதலிடம் பிடித்தது.

திருச்சி

அருண் நேரு பிறந்தநாளையொட்டி நடந்த பெண்களுக்கான கபடி போட்டியில் கரூர் அணி வெற்றி பெற்றது. ஆண்களுக்கான போட்டியில் சென்னை காவல்துறை அணி முதலிடம் பிடித்தது.

கபடி போட்டி

காடுவெட்டியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் தொழில் அதிபர் அருண் நேருவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காடுவெட்டியார் பேரவை டைனமோஸ் கபடிக் குழு மற்றும் காடுவெட்டி தி.மு.க. இளைஞரணி சார்பாக கபடிபோட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

போட்டிக்கு முசிறி சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 2-ம் நாள் போட்டியை காடுவெட்டியார் பேரவை இளைஞர் அணி காடுவெட்டி கே.டி. அகத்தீஸ்வரன் ஆண்களுக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் சென்னை, திருச்சி, மதுரை, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் மற்றும் காவல்துறையை சேர்ந்த கபடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

கரூர், சென்னை காவல்துறை

இந்தப் போட்டியில் ஆண்களுக்கான முதல் பரிசை சென்னை காவல்துறை அணியினரும், 2-ம் பரிசை காடுவெட்டி டைனமோஸ் கபடிக் குழுவும், பெண்களுக்கான முதல் பரிசை கரூர் அணியினரும், 2-ம் பரிசை அரியலூர் அணியினரும் பெற்றனர். இதையொட்டி நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி தொழிலதிபர் அருண் நேரு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

பரிசளிப்பு விழாவுக்கு முசிறி சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், தொழில் அதிபர் நாமக்கல் துரை, மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி, மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன், தொட்டியம் ஒன்றிய இளைஞரணி காடுவெட்டி, எம்.சத்தியசீலன், தொட்டியம் ஒன்றிய செயலாளர்கள் பால.நா.திருஞானம் (கிழக்கு), மேக்கல்நாயக்கன்பட்டி தங்கவேல் (மேற்கு) மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள். தொட்டியம், முசிறி, தா.பேட்டை, துறையூர் மண்ணச்சநல்லூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை காடுவெட்டியார் பேரவைத் தலைவரும், தி.மு.க. இளைஞர் அணி கே.டி.அகத்தீஸ்வரன் மற்றும் காடுவெட்டி இளைஞரணியினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story