வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்புமகளிர் உரிமை திட்ட பேனர் கிழிப்பு
நாமக்கல்
பரமத்திவேலூர்
வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் இருந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தையும், பிளக்ஸ் பேனரையும் மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story