பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஆலங்குளம் அருகே கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பெண்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
விருதுநகர்
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு கிராமத்தில் கோவில் இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார் எனவும் இந்த இடத்தை மீட்டு தரவேண்டும் எனவும் மேலாண்மறைநாடு கிராமத்து பெண்கள் பரமேஸ்வரி தலைமையில் ஊர் சாவடி உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மயில், போலீசார், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், அப்பய நாயக்கர்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story