முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர வாய்ப்பு
முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடந்த 8.11.2011-ல் பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் இறந்து போனவர்களின் வாரிசுதாரர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய 13.6.22 முதல் 18.6.22 வரை விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விருப்ப விண்ணப்பம் அளித்து பணியில் சேராத முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் பணியில் சேர 12.10.22 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. விருப்ப விண்ணப்பங்கள் அளித்த தகுதி உள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் அவர்களது வாரிசுதார்கள் மற்றும் இதுவரை விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்காத தகுதியானவர்கள் பணியில் சேர விரும்பம் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பணியில் சேரலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.