தாசில்தார்கள் அதிரடி பணியிட மாற்றம்


தாசில்தார்கள் அதிரடி பணியிட மாற்றம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரியும் தாசில்தார்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு தனிதாசில்தார் பார்த்தசாரதி பரமக்குடிக்கும், அங்கு பணி புரிந்த தமீம் ராசா, ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் தமிழ்ச்செல்வி, திருவாடானை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தில் வேல்முருகன் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும்,ராமநாதபுரம் டாஸ்மாக் கிடங்கு மேலாளர் சுரேஷ் குமார், ராமநாதபுரம் தாசில்தாராகவும், அங்கு பணி புரிந்த முருகேசன், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஞான சிரோன் மணி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராகவும், அங்கு பணி புரிந்த சேகர், பரமக்குடி நகர நிலவரி திட்ட தாசில்தாராகவும் முதுகுளத்தூர் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சேதுராமன், ராமநாதபுரம் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி, கடலாடி தாசில்தாராகவும், அங்கு பணி புரிந்த முருகவேல் உப்பூர் அனல் மின் திட்ட அலகு 2 நில எடுப்பு தாசில்தாராகவும், அங்கு பணி புரிந்த உமா மகேஸ்வரி, ராமேசுவரம் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பரமக்குடி

பரமக்குடி இந்து அறநிலையத்துறை (கோவில் நிலங்கள்) தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராகவும், அங்கு பணி புரிந்த சுகுமாறன், பரமக்குடி இந்து அறநிலையத்துறை (கோவில் நிலங்கள்) தனி தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பிறப்பித்துள்ளார்.


Next Story