கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
தர்மபுரி
அரூர்:
பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்கள் இடையே கடந்த 32 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக வேலை பார்க்கும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தொழிலாளர்கள் தெரிவித்து இருந்தனர். அதன்படி அரூர் அருகே உள்ள கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Next Story