வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்
x

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.

வாக்காளர் அட்டை

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடம் இருந்து விருப்பத்தின் பேரில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,301 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6 பி-ல் வாக்காளர்களிடம் பெற்று இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சத்துவாச்சாரி மந்தைவெளி பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

விழிப்புணர்வு

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் சுமார் 12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) நடந்த சிறப்பு முகாமில் ஒரேநாளில் சுமார் 30 ஆயிரம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இன்றும் (நேற்று) சிறப்பு முகாம் நடந்தது.

அதிலும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டனர். எனினும் சிலர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே இனி வரும் நாட்களில் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். வாக்காளர்கள் அனைவரையும் இணைக்கும் நடவடிக்கையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.


Next Story