கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்


கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
x

நெல்லை டவுனில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை நீர் மாநகர பகுதிகளின் தாழ்வான இடங்களில் தேங்கிக் கிடக்கிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் சூழ்நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் அறிவுரையின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் மாலையில் நெல்லை டவுன் ரத வீதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியின் போது தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று தண்ணீரின் தரத்தையும் ஆய்வு செய்தனர்.


Next Story