மக்காச்சோளத்தில் களை எடுக்கும் பணி தீவிரம்
ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளத்தில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளத்தில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மக்காச்சோளம் சாகுபடி
ஆலங்குளம். கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம், கோபாலபுரம், கண்மாய்பட்டி அருணாசலபுரம், கீழாண்மறைநாடு, வலையபட்டி, பெத்லேகம், அப்பயநாயக்கர்பட்டி, மேலாண்மறைநாடு, கோவில் செந்தட்டியாபுரம், கொங்கன்குளம், நதிக்குடி, திருவேங்கடபுரம், ஆத்தூர், சுப்பிரமணியபுரம், எதிர்கோட்டை, உப்புபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, எட்டக்காபட்டி, குண்டாயாரிப்பு, முத்துச்சாமிபுரம், கண்டியாபுரம், தொம்பகுளம், ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்கின்றனர்.
இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் தீவிரமாக விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.
களை எடுக்கும் பணி
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், மழை பெய்யாததாலும் மக்காச்சோளம் கருகியது. இதையடுத்து அவர்கள் மீண்டும் விதைகளை ஊன்றினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
ஆலங்குளம் பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்துள்ளோம். இங்கு 4 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளமும், 500 ஏக்கரில் பாசிபயறு, வெள்ளை சோளம், நித்திய கல்யாணி ஆகியவற்றையும் சாகுபடி செய்துள்ளோம். தற்போது களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.