செயற்கை நீர்வீழ்ச்சிகளை பொலிவுபடுத்தும் பணி மும்முரம்


செயற்கை நீர்வீழ்ச்சிகளை பொலிவுபடுத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடை சீசனையொட்டி கன்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் குன்னூரில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை பொலிவுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

குன்னூர்

கோடை சீசனையொட்டி கன்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் குன்னூரில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை பொலிவுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராணுவ முகாம்

குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் கன்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் உள்ளது. இந்த நிர்வாகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் குடியிருக்கும் சிவில் குடியிருப்புகள் ராணுவ முகாமை ஒட்டி உள்ள பகுதிகளாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிளாக் பிரிட்ஜில் இருந்து பிரிந்து முக்கிய சுற்றுலா தலமான சிம்ஸ் பூங்கா செல்லும் சாலையில் ராணுவ ஆஸ்பத்திரி, ராணுவ முகாம், ராணுவ பயிற்சி கல்லூரி, ஜிம்கானா மைதானம் ஆகியவை உள்ளன. ஊட்டியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சிம்ஸ் பூங்கா செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளை கவர பிளாக் பிரிட்ஜில் கன்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

நீர்வீழ்ச்சிகள்

மேலும் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அமைந்துள்ள பேரக்சிலும் வண்ண மின்விளக்குகளில் ஒளிரும் செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் ராணுவ வீரர்களின் உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயற்கை நீர்வீழ்ச்சிகள்கள் பராமரிப்பின்றி இருந்து வந்தன.

இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரப்படுகிறது குறிப்பாக கோடை சீசனை முன்னிட்டு ராணுவ உயர் அதிகாரிகள் வர வாய்ப்பு உள்ளது.

பொலிவுபடுத்தும் பணி

இதையொட்டி கன்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள வண்ண மின்விளக்குகளில் ஒளிரும் செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் உருவ பொம்மைகளை பொலிவுபடுத்தும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால் வரும் கோடை சீசனில் அந்த பகுதி புதுப்பொலிவுடன் சுற்றுலா பயணிகளை கவர உள்ளது.


Next Story