இருசக்கர வாகனத்துடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

இருசக்கர வாகனத்துடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி
x

தேன்கனிக்கோட்டை அருகே கனமழையால் சீனிவாசா ஏரி நிரம்பி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி அடித்து செல்லப்பட்டார். அவரை கிராமமக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே கனமழையால் சீனிவாசா ஏரி நிரம்பி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி அடித்து செல்லப்பட்டார். அவரை கிராமமக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

ஏரி நிரம்பியது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அந்தேவனப்பள்ளி பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சீனிவாசா ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சீனிவாசா ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின. ஏரி நிரம்பி அங்குள்ள சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாலை துண்டிக்கப்பட்டதால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். இருந்த போதிலும் தங்களது அன்றாட வேலைகளுக்காக பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் அவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்தபடி சென்றனர். விவசாயிகள் பால் கேனுடனும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையிலும் தண்ணீரில் நடந்து சென்றனர்.

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் சென்றார். அப்போது அவரை தண்ணீர் அடித்து சென்றது. அவர் அங்கிருந்த ஒரு மரக்கிளையை பிடித்து தண்ணீரில் தத்தளித்தார். இதை பார்த்த கிராமமக்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அவரை பத்திரமாக மீட்டனர். ஆனால் அவரது இருசக்கர வாகனம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

Next Story