முன்னாள் காதலியே வருக... வருக... எனபெண்ணை பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டிய தொழிலாளி கைது
ஆத்தூர்
ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு நகரில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் வந்தார். அங்கு அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், 'நான் தற்போது திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளியூரில் வசித்து வருகிறேன். அதே பகுதியை சேர்ந்த சின்னப்பையன் என்பவரது மகன் மாரிமுத்து (வயது 33) என்பவர் நான் எனது தாயார் வீட்டிற்கு உறவினர் இல்ல திருமண விசேஷத்திற்காக வந்தேன். அப்போது அந்த பகுதியில் கூலித்ெதாழிலாளியான மாரிமுத்து, எனது முன்னாள் காதலியே வருக...வருக... என சுவரொட்டி அச்சிட்டு ஒட்டி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பெண்ணை பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டியதாக மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.