டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய தொழிலாளி கைது
சேலம்
மேச்சேரி:-
மேச்சேரி அருகே பானாபுரம் ஊராட்சியில் சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் காடையாம்பட்டி அருகே உள்ள பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மாதேசன் பணியில் இருந்தார். அப்போது மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி வெங்கடேஷ் (வயது 25) அங்கு வந்தார். அவர் மாதேசனிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை தாக்கி, பீர்பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாதேசன் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசை கைது செய்தனர்.
Next Story