போடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது


போடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
x

போடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தேனி

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பொட்டல்களம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 31). இவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை அதே பகுதியை சேர்ந்த அழகுராஜா என்பவர் கோவைக்கு எடுத்துச் சென்றார். அப்போது அந்த எந்திரம் திருட்டு போனது. இதுகுறித்து மகேஸ்வரி கோவை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கோவை போலீசார் பொட்டல்களத்திற்கு வந்து அழகுராஜாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஆத்திரமடைந்த அழகுராஜாவின் தந்தை பழனிசாமி (57), மகேஸ்வரின் வீட்டிற்கு சென்று அவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.


Next Story