ரேஷன் கடையில் தராசை தூக்கி வீசிய தொழிலாளி கைது


ரேஷன் கடையில் தராசை தூக்கி வீசிய தொழிலாளி கைது
x

ரேஷன் கடையில் தராசை தூக்கி வீசிய தொழிலாளி கைது

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள கல்லுக்கூட்டத்தில் ஒரு ரேஷன் கடை உள்ளது. அந்த ரேஷன் கடை நேற்று வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. மாலை அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியும் கொல்லஞ்சி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் (வயது 43) திடீரென ரேஷன் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மின்னணு தராசை தூக்கி வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர் சுஜிகலா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story