கொலை வழக்கில் கைதான தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி


கொலை வழக்கில் கைதான தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் ஓட்டலில் ஏற்பட்ட மோதலில் சக தொழிலாளியை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் ஓட்டலில் ஏற்பட்ட மோதலில் சக தொழிலாளியை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஓட்டலில் கொலை

கன்னியாகுமரி அருகே உள்ள தென்தாமரைகுளம் தேரிவிளையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது50). இவர் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இடையே கடந்த 10-ந் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்.

அப்போது ராதாகிருஷ்ணன் சுடுநீர் இருந்த இரும்பு சட்டியால் கணேசனை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் அங்கு இருந்த கத்தியால் ராதாகிருஷ்ணனை சரமாரியாக குத்தினார். இதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார், தப்பி ஓடிய கணேசனை ேதடி வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் திருச்செந்தூரில் பதுங்கி இருந்த கணேசனை போலீசார் கைது செய்து மார்த்தாண்டத்துக்கு அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் கணேசனை ராதாகிருஷ்ணன் தாக்கிய போது இரும்பு சட்டியில் இருந்த சுடுநீர் அவர் மீது பட்டு உடல் வெந்து காயம் ஏற்பட்டது. அத்துடன் இரும்பு சட்டியால் தாக்கியதால் கணேசனின் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே கைது செய்யப்பட்ட கணேசனை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story