கள்ளக்காதல் விவகாரத்தில் கம்பியால் தொழிலாளி அடித்துக்கொலை


கள்ளக்காதல் விவகாரத்தில் கம்பியால் தொழிலாளி அடித்துக்கொலை
x

அரியலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கம்பியால் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

கம்பியால் அடித்துக்கொலை

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழூர் அருகே உள்ள கோவில் எசனை கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 48), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுக்கு நிவேதா (15), நித்திஷ் (13), நித்யா (8) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மதியம் மனோகரன் மது போதையில் அய்யனார் கோவில் முன்பு உள்ள மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த விஜயகாந்த் என்ற லாரி டிரைவர் இரும்பு ராடால் (கம்பியால்) மனோகரனின் தலைப்பகுதியில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, விஜயகாந்த் அங்கிருந்து தப்பி ஓடினார்.

கள்ளக்காதல் விவகாரம்

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனோகரன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விஜயகாந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story