தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரக்கொலை


தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரக்கொலை
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

நண்பர்கள்

தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42), சுமை தூக்கும் தொழிலாளி. தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான சப்பாணிமுத்து (43). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.

மதுபோதையில் வாக்குவாதம்

நேற்று முன்தினம் இரவில் இவர்கள் 2 பேரும் அண்ணாநகர் சலவைக்கூடத்தில் வைத்து மது அருந்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது, மாரியப்பன் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு மாலையை சப்பாணி முத்து அறுத்து விட்டதாகவும், அவரது தாய் பற்றி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கல்லைப்போட்டு கொலை

பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் அந்த பகுதியில் படுத்து தூங்கினா். அப்போது, கண் விழித்த மாரியப்பன் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து சப்பாணிமுத்துவின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாரியப்பன் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகி நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ெகாடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சப்பாணிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து மாரியப்பனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story