தீயில் கருகி தொழிலாளி சாவு
கழுகுமலையில் தீயில் கருகி தொழிலாளி இறந்து போனார்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா தெற்கு அச்சம்பட்டியை சேர்ந்த மருதையா மகன் பாக்கியசாமி (வயது 55). இவர் கழுகுமலையில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் 20 வருடங்களாக கூலி தொழிலாளியாக வேலைசெய்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந்தேதி மாலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் உள்ள கழிவு குச்சிகளை அங்குள்ள மாட்டுத்தாவணி பகுதியில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த தீயில் கொட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்் மீது தீக்காயம் ஏற்பட்டது. சக தொழிலாளிகள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.