விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கரிசல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது75). கூலி தொழிலாளியான இவர் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், பல்வேறு இடங்களில் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தண்டபாணி மகன் முனியசாமி அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story