இரணியல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
இரணியல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
இரணியல் அருேக உள்ள மணக்கரை பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை (வயது 48), கூலி தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். மாதவன் பிள்ளைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதனை விட முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிைலயில் சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story