விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள சேதுராஜபுரத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் அவரது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது மனைவி பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த பலராம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சியாமளாதேவி அளித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story