விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்ெகாலை செய்து கொண்டார்
தேனி
தேவதானப்பட்டி அருகே உள்ள சிந்துவம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story