விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

மணல்மேடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேட்டை அடுத்த கொற்கை வடக்குவெளி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 38) விவசாய கூலி தொழிலாளியான இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் மனவேதனை அடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரமூர்த்தி உயிரிழந்தார் இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story