Normal
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கள்ளிக்குடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
திருமங்கலம்,
கள்ளிக்குடி அருகே உள்ள கல்லணை கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மணிமேகலை. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன்- மனைவிக்குள் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மன விரக்தியில் இருந்த பழனியாண்டி நேற்று கள்ளிக்குடி அருகே உள்ள தனது பெற்றோர் வசிக்கும் மருதங்குடி கிராமத்திற்கு வந்து உள்ளார். அங்கு பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் அங்கு உள்ள ஊருணியை நோக்கிச் சென்ற அவர் அங்கு கரையோரம் விஷம் குடித்து மயங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பழனியாண்டி உயிரிழந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story