தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

மானூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே எட்டான்குளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் (வயது 47). மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஸ்ரீரங்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தினர் தன்னை வெறுப்பதாக கருதிய அவர் மன உளைச்சலில் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story