தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு (45). கூலி தொழிலாளி. இந்தநிலையில் வடிவேலுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வடிவேலு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வடிவேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடிவேலுவின் தாய் ரெங்கம்மாள் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story